/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மார்க்கெட்டில் திரிந்த மாடுகள் பிடிப்பு
/
மார்க்கெட்டில் திரிந்த மாடுகள் பிடிப்பு
ADDED : அக் 27, 2024 03:51 AM
திண்டிவனம் : திண்டிவனம் காய்கறி மார்க்கெட்டில் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிந்த 18 மாடுகளை நகராட்சி அதிகாரிகள் பிடித்து அடைத்தனர்.
திண்டிவனம் நேரு வீதியில் உள்ள காய்கறி மார்க்கெட் பகுதியில் அதிகளவில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடிக்க வேண்டும் என காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர் நகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
நகராட்சி கமிஷனர் குமரன் உத்தரவின் பேரில், நேற்று மார்க்கெட் பகுதியில் திரிந்த 18 மாடுகளை, சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான நகராட்சி ஊழியர்கள் பிடித்து பட்டியில் அடைத்தனர்.
பிடிபட்ட மாடுகளின் உரிமையாளர் நகராட்சிக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தினால் மாடுகள் விடுவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.