/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம்
/
தி.மு.க., சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம்
ADDED : ஜூலை 14, 2025 03:55 AM

செஞ்சி : வல்லம் ஒன்றியம் நெகனுார், புதுார் கிராமத்தில் தி.மு.க., இளைஞரணி சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா மற்றும் சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.
வடக்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். சேர்மன் அமுதா ரவிக்குமார், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் ஆனந்த், துணை அமைப்பாளர் அண்ணாமலை முன்னிலை வகித்தனர். கிளைச் செயலாளர் சிதம்பரம் வரவேற்றார்.
மஸ்தான் எம்.எல்.ஏ., தலைமைக் கழக பேச்சாளர் அன்பரசு, நேரு ஆகியோர் சாதனைகளை விளக்கி பேசினர்.
முன்னாள் எம்.எல்.ஏ., மாசிலாமணி, மாவட்ட தலைவர் சேகர், அமைப்புசாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் தமிழரசன், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ரோமியான், மாவட்ட கவுன்சிலர் அன்புச்செழியன், ஒன்றிய நிர்வாகிகள் ஏழுமலை, பெருமாள், ராஜலிங்கம், மணிமேகலை, ரவிச்சந்திரன், ஞானமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
இளைஞர் அணி துணை அமைப்பாளர் பழனி நன்றி கூறினார்.