/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வேலை நிறுத்தத்தால் பணப்பரிமாற்ற பாதிப்பு... ரூ.500 கோடி; தபால், எல்.ஐ.சி., அலுவலகங்களும் 'வெறிச்'
/
வேலை நிறுத்தத்தால் பணப்பரிமாற்ற பாதிப்பு... ரூ.500 கோடி; தபால், எல்.ஐ.சி., அலுவலகங்களும் 'வெறிச்'
வேலை நிறுத்தத்தால் பணப்பரிமாற்ற பாதிப்பு... ரூ.500 கோடி; தபால், எல்.ஐ.சி., அலுவலகங்களும் 'வெறிச்'
வேலை நிறுத்தத்தால் பணப்பரிமாற்ற பாதிப்பு... ரூ.500 கோடி; தபால், எல்.ஐ.சி., அலுவலகங்களும் 'வெறிச்'
ADDED : ஜூலை 10, 2025 02:41 AM

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், அகில இந்திய வேலை நிறுத்த போராட்டத்தில் தபால், வங்கி, எல்.ஐ.சி., ஊழியர்கள் 40 சதவீதம் பேர் கலந்துகொண்டதால், அலுவல் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதில், வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால், ரூ.500 கோடிக்கும் மேல், பணப்பரிமாற்றம் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் மத்திய அரசை கண்டித்தும், தொழிலாளர் நலச்சட்டங்களை பாதுகாக்கவும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தவும், 8வது சம்பள கமிஷனை அமைக்க வலிறுத்தியும், தொழிற் சங்க கூட்டமைப்பு சார்பில், அகில இந்திய வேலை நிறுத்த போராட்டம் நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் நடந்தது.
இதையொட்டி, விழுப்புரம் தலைமை தபால் நிலையம் முன்பு நடந்த வேலை நிறுத்த போராட்டத்தில், அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் பங்கேற்றுனர்.
கோட்ட தலைவர் பாண்டியன் தலைமை வகித்தார். கோட்ட செயலாளர் வேலு முன்னிலை வகித்தார். கோட்ட செயலர் வாசு வாழ்த்தி பேசினார்.
இதில், ஏழுமலை, சதாசிவம், வெங்கடேசன், தாமோதரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர். ஏராளமான அஞ்சல் துறை ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
இந்த போராட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 வது ஊதிய கமிஷனை அமைக்க வேண்டும்; ஜி.டி.எஸ்., ஊழியர்களையும் அதில் இணைக்க வேண்டும்; பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்; ஜி.டி.எஸ்., ஊழியர்களுக்கு 8 மணி நேரம் வேலை வழங்கி துறை ஊழியர்களாக மாற்ற வேண்டும்;ஐ.டி.சி., திட்டத்தை கைவிட வேண்டும்; என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதேபோல, விழுப்புரத்தில் வங்கிகள் மற்றும் எல்.ஐ.சி., ஊழியர்கள் கூட்டமைப்பு வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடந்தது. அகில இந்திய தொழிற்சங்கங்க அழைப்பின்படி ஒருநாள் வேலை நிறுத்தத்தை விளக்கி, விழுப்புரம் எல்.ஐ.சி., கிளை அலுவலக முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் வங்கி மற்றும் காப்பீட்டு ஊழியர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
காப்பீட்டு கழக ஊழியர் சங்க தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். வங்கி ஊழியர் சங்க செயலாளர் அமீர்பாஷா, நிர்வாகிகள் குருமூர்த்தி, பிரபு முன்னிலை வகித்தனர்.
காப்பீட்டு கழக ஊழியர் சங்க கிளை செயலாளர் குணசேகரன் வரவேற்றார். வங்கி ஊழியர்கள், எல்.ஐ.சி., ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
இதில் காப்பீடு நிறுவனங்கள், வங்கிகள், துறைமுகம், ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கலை தடுக்க வேண்டும்; காப்பீட்டு திட்டங்களில் ஜி.எஸ்.டி., வரியை நீக்க வேண்டும்; பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரமாக்க வேண்டும்; தொழிலாளர் விரோத சட்டங்களை நீக்க வேண்டும்; என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.
ரூ.500 கோடி பணப்பரிமாற்றம் பாதிப்பு
விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு தபால் நிலையங்களில் 40 சதவீதம் ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்டனர். இதேபோல், எல்.ஐ.சி., வங்கி ஊழியர்களும், 40 சதவீதம் பேர் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்டதால், வங்கிகள், எல்.ஐ.சி., அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.
மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் ரூ.500 கோடிக்கும் மேல், பணப்பரிமாற்றம் பாதிக்கப்பட்டதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.