/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கூட்டுறவு ஆலை பள்ளியை மூடுவதற்கு கடும் எதிர்ப்பு: எம்.எல்.ஏ.,விடம் ஆசிரியர்கள் கோரிக்கை மனு
/
கூட்டுறவு ஆலை பள்ளியை மூடுவதற்கு கடும் எதிர்ப்பு: எம்.எல்.ஏ.,விடம் ஆசிரியர்கள் கோரிக்கை மனு
கூட்டுறவு ஆலை பள்ளியை மூடுவதற்கு கடும் எதிர்ப்பு: எம்.எல்.ஏ.,விடம் ஆசிரியர்கள் கோரிக்கை மனு
கூட்டுறவு ஆலை பள்ளியை மூடுவதற்கு கடும் எதிர்ப்பு: எம்.எல்.ஏ.,விடம் ஆசிரியர்கள் கோரிக்கை மனு
ADDED : டிச 26, 2024 06:09 AM
திருவெண்ணெய் நல்லுார்: திருவெண்ணெய் நல்லூர் அருகே உள்ள செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சொந்தமான பள்ளியை மூட வேண்டாம் என ஆசிரியர்கள் எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய் நல்லூர் அடுத்த பெரிய சேலை கிராமத்தில் செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சொந்தமான பள்ளி இயங்கி வருகிறது. இங்கு எல்.கே.ஜி., முதல் 10ம் வகுப்பு வரை வகுப்பறைகள் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பெரிய சேவலை,சரவணம்பாக்கம், துலக்கம் பட்டு, உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து மொத்தம் 875 மாணவர்களும், 37 ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் செலுத்தக்கூடிய பள்ளி கட்டணத்திலிருந்து மாதச் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆசிரியர்களுக்கு முறையாக ஊதியம் வழங்காமல் உள்ளதாலும் மேலும் பள்ளி நஷ்டத்தில் செயல்படுவதாக கூறி அனைத்து மாணவர்களையும் வருகின்ற 31ம் தேதிக்குள் வேறு பள்ளிக்கு மாற்றம் செய்ய வேண்டுமென தலைமையாசிரியருக்கு நிர்வாகம் தரப்பிலிருந்து தகவல் வந்துள்ளது.
இதை அடுத்து பள்ளியை பாதியிலேயே நிறுத்தினால் மாணவர்கள் எங்கு போய் கல்வி பயில்வார்கள் என ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து நேற்று முன்தினம் அப்பகுதி எம்.எல்.ஏ., மணிகண்ணனிடம் பள்ளியை தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரி மனு அளித்தனர். இதை அடுத்து எம்.எல்.ஏ., மாவட்ட நிர்வாகத்திடம் இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தி பள்ளியை தொடர்ந்து செயல்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
ஆலை நிர்வாக இயக்குனர் விளக்கம்: இது சம்பந்தமாக ஆலை நிர்வாக இயக்குனர் முத்து மீனாட்சி கூறியதாவது : வெளி மாவட்டங்களில் உள்ள ஆலைக்கு சொந்தமான பள்ளிகள் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. அதனால் அப்பள்ளியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதேபோல் இப்பள்ளியும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது இது சம்பந்தமாக மாவட்ட அமைச்சரிடம் தகவல் தெரிவித்த போது மாவட்ட அமைச்சர் பள்ளியை தொடர்ந்து நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அவரது உத்தரவின் பேரில் பள்ளி தொடர்ந்து செயல்படும் என அவர் கூறினார்.
பெற்றோர்கள் எதிர்ப்பு: படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு குழந்தைகளை எங்கு போய் சேர்ப்பது. இது அரசாங்கத்திற்கு நியாயமாக படுகிறதா என தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்தனர். மேலும் மாவட்ட நிர்வாகம் இத்தகைய செயலில் ஈடுபட்டால் அனைவரும் ஒன்று திரண்டு போராட்டம் நடத்துவோம் என திட்டவட்டமாக தெரிவித்தனர்.

