ADDED : மார் 12, 2024 06:09 AM

அ நிறம் | அளவு
கண்டமங்கலம் : கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
பள்ளி வளாகத்தில் தொடங்கிய ஊர்வலத்திற்கு, வட்டார கல்வி அலுவலர் சேகர், ஊராட்சி துணைத் தலைவர் பத்மாவதி சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தனர். கண்டமங்கலம் ஊராட்சி தலைவர் பிரியதர்ஷினி முருகன்ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தார்.
ஊர்வலத்தில், வட்டாரவள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) அரிகிருஷ்ணன், பள்ளி தலைமையாசிரியை தேன்மொழி மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள், ஆசிரியர்கள் முக்கிய வீதிகள் வழியாக துண்டுபிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திச் சென்றனர்.
