ADDED : மார் 14, 2024 05:11 AM

அ நிறம் | அளவு
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி ஒன்றியம் தும்பூரில் மாணவர் சேர்க்கை விழா விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
தும்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை தலைமை ஆசிரியை சிவக்குமாரி துவக்கி வைத்தார்.
மாணவர்கள் வீடு வீடாக சென்று மாணவர்களை பள்ளியில் சேர்க்க விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை வழங்கினர். ஊராட்சி தலைவர் பஞ்சவர்ணம், ஆசிரியர்கள் சித்ரா, ஜெயராணி பள்ளி மேலாண்மை குழு தலைவர் நாகரத்தினம், கல்வி குழு ராஜாக்கண்ணு , இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
