/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை
/
அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை
ADDED : ஆக 09, 2025 07:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம் : திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லுாரியில் முதுநிலை மாணவர்கள் சேர்க்கை வரும் 11 ம் தேதி நடக்கிறது.
கல்லுாரி முதல்வர் நாராயணன் செய்தி குறிப்பு:
கல்லுாரியின் 2025-26ம் கல்வியாண்டில் முதுநிலை (எம்.ஏ.,எம்.எஸ்.சி., மற்றும் எம்.காம்.,) மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடக்கின்றது.
வரும் 11 ம் தேதி முதுநிலை மாணவர்களுக்கான சிறப்பு ஒதுக்கீடு(விளையாட்டு, முன்னாள் ராணுவ வீரர்கள், மாற்றுத்திறனாளி உட்பட) கலந்தாய்வும், வரும் 13 ம் தேதி முதுநிலை அனைத்து பாடப்பிரிவினருக்கும் பொது கலந்தாய்வு நடக்க உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.