/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனம் அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை
/
திண்டிவனம் அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை
ADDED : ஜூலை 07, 2025 02:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லுாரியில் நாளை சிறப்பு மாணவர் சேர்க்கை நடக்க உள்ளதாக, முதல்வர் ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கல்லுாரியில் நாளை காலை 10:00 மணிக்கு மாணவர்களுக்கான சிறப்பு சேர்க்கை கலந்தாய்வு நடக்கிறது. இதில்,
மாற்று ஒதுக்கீடு செய்து, மாணவர்களுக்கு சேர்க்கை வழங்கப்படும். இதுவரை சேர்க்கை கிடைக்காதவர்கள் கலந்து கொள்ளலாம். மாணவர்கள் பெற்றோருடன் உரிய அசல் சான்றிதழ்கள், கட்டணத்துடன் கலந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.