/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் மாணவர் சேர்க்கை
/
கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் மாணவர் சேர்க்கை
ADDED : அக் 09, 2025 11:40 PM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.
கலெக்டர் ஷேக்அப்துல்ரஹ்மான் செய்திக்குறிப்பு:
மாவட்டத்தில், குழந்தைகளுக்கான கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009ன் படி, 2025-26ம் கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை, நுழைவு நிலை வகுப்புகளான எல்.கே.ஜி., மற்றும் 1ம் வகுப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கை, தற்போது கடந்த 6ம் தேதி தொடங்கியது. வரும் 17ம் தேதி வரை நடைபெற உள்ளது.
கட்டாய கல்வி உரிமை சட்டப்படி 25 சதவீதம் மாணவர்கள் சேர்க்கையில் பயன்பெற விரும்பும் பெற்றோர், இது குறித்து, தங்கள் குழந்தைகள் பயிலும் பள்ளிகளின் முதல்வர்களை தொடர்புகொண்டு, விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.