ADDED : செப் 12, 2026 09:21 PM
அ நிறம் | அளவு
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே பாம்பு தீண்டி அரசு பள்ளி மாணவர் இறந்தார்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த துலங்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் திருமலை, 17; களமருதுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
இவர், தனது தந்தைக்கு உதவியாக கடந்த 10ம் தேதி இரவு வயலுக்கு நீர் பாய்ச்ச சென்றார். அப்போது, விரியன் பாம்பு கடித்தது.
உடன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று முன்தினம் இரவு இறந்தார்.
திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
