/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தரம்சந்த் ஜெயின் பள்ளியில் மாணவர் தலைவர் பதவியேற்பு
/
தரம்சந்த் ஜெயின் பள்ளியில் மாணவர் தலைவர் பதவியேற்பு
தரம்சந்த் ஜெயின் பள்ளியில் மாணவர் தலைவர் பதவியேற்பு
தரம்சந்த் ஜெயின் பள்ளியில் மாணவர் தலைவர் பதவியேற்பு
ADDED : ஜூலை 08, 2025 11:44 PM

திண்டிவனம்; திண்டிவனம் அருகே கருவம்பாக்கத்திலுள்ள ஸ்ரீ தரம்சந்த் ஜெயின் பள்ளியில் மாணவர் தலைவர் பதவியேற்பு விழா நடந்தது.
பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு வெள்ளிமேடு பேட்டை சப்இன்ஸ்பெக்டர் முரளி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.
பள்ளியின் தாளாளர் பப்ளாசா, பொருளாளர் நவீன்குமார், நிர்வாக இயக்குநர் அனுராக், முதல்வர் சாந்திபாலச்சந்தர் முன்னிலை வகித்தனர்.மாணவர் தலைவர், மாணவர் துணைத் தலைவர், கலாசார துறை தலைவர், விளையாட்டுத்துறை தலைவர் மற்றும் பள்ளியின் நால்வகை அணியின் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் ஆகிய பதவிகளுக்கு ஆண் பெண் என இரு பிரிவுகளிலும் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களுக்கு பதவி ஏற்பு விழா நடந்தது.
பதவி ஏற்ற தலைவர்கள் உறுதிமொழி ஏற்றனர். மேலும் இதில் பள்ளி மாணவ,மாணவியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.