ADDED : ஏப் 19, 2025 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம், ; பத்தாம் வகுப்பு மாணவர் விஷம் சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவத்தில், வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
விழுப்புரத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன், அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் பி.என்.தோப்பு பகுதியைச் சேர்ந்த பாபுராஜ், 32; என்பவரின் வீட்டின் அருகே உள்ள புளிய மரத்தில் ஏறி புளி உலுக்கினார். இதைக்கண்ட பாபுராஜ் திட்டியதால் மனமுடைந்த மாணவர் விஷம் சாப்பிட்டு மயங்கி விழுந்தார்.
அக்கம் பக்கத்தினர் மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புகாரின்பேரில் பாபுராஜ் மீது விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.