ADDED : மார் 25, 2026 11:18 PM
அ நிறம் | அளவு
அவலுார்பேட்டை: வளத்தி அருகே எலி மருந்து சாப்பிட்ட மாணவி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
வளத்தி அடுத்த உடையாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த வடிவேல் மகள் ரோகினி, 14;
இவர் வயலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9 ம்வகுப்பு படிக்கிறார். வீட்டு வேலை செய்யாததால் பாட்டி திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி, 22 ம் தேதி, எலி மருந்து சாப்பிட்டு மயங்கி விழுந்துள்ளார்.
திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட மாணவி சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
