/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நியூ ஜான்டூயி பள்ளியில் மாணவர் பதவியேற்பு விழா
/
நியூ ஜான்டூயி பள்ளியில் மாணவர் பதவியேற்பு விழா
ADDED : ஜூலை 12, 2025 11:19 PM

விழுப்புரம்: விழுப்புரம் நியூ ஜான்டூயி பள்ளியில் மாணவர் தலைமை பதவியேற்பு விழா மற்றும் புதிய கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது.
பள்ளி தாளாளர் வீரதாஸ் தலைமை தாங்கினார். கல்வி நிர்வாக இயக்குநர் எமர்சன் ராபின், கல்வி அதிகாரி சுகன்யா முன்னிலை வகித்தனர். விக்கிரவாண்டி டோல்கேட் மேலாளர் சொர்ணமணி, மாணவர்களின் அணிவகுப்பை ஏற்று கொண்டு கூறியதாவது:
மாணவர்கள் ஒழுக்கத்தோடு கற்க வேண்டும். ஒவ்வொரு மாணவனும், தன்னை தலைவர் என நினைத்து கொண்டு செயல்பட வேண்டும். தன்னலம் கருதாமல் அன்பு, பரிவு, பாசம், விட்டு கொடுத்தல் ஆகிய சமத்துவ பண்பை எடுத்து கொள்ள வேண்டும். அமைதியை கடைபிடிக்க வேண்டும். கல்வியே நிலையான சொத்து
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து மாணவர் தலைவர், கலை மற்றும் இலக்கிய தலைவர் பதவியேற்று உறுதிமொழி ஏற்றனர்.
மேலும் வீனஸ், நெப்டியூன், மெர்க்குரி, ஜூபிடர் ஆகிய அணி தலைவர்களுக்கு பள்ளி தலைவர், உதவி தலைவர் பொறுப்பேற்றனர்.
கடந்தாண்டு இந்த பள்ளியில் பொதுத்தேர்வில் 100 சதவீதம் வெற்றியை பெற்று தந்த ஆசிரியர்களுக்கு பதக்கம், வெகுமதி வழங்கப்பட்டது.
முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.