/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செஞ்சி கோட்டைக்கு மாணவர்கள் சுற்றுலா
/
செஞ்சி கோட்டைக்கு மாணவர்கள் சுற்றுலா
ADDED : நவ 02, 2025 11:48 PM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் துறை சார்பில் செஞ்சி கோட்டை சுற்றுலா தளத்திற்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
விழுப்புரம் மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான ஜி.ஆர்.பி., வீதியில் சிறுவர் மன்றம் இயங்குகிறது.
இங்குள்ள 30 சிறுவர், சிறுமிகள் நேற்று எஸ்.பி., சரவணன் அறிவுறுத்தலின் பேரில், ஏ.எஸ்.பி., ரவீந்திரகுமார் குப்தா மேற்பார்வையில் வரலாற்று சிறப்புமிக்க செஞ்சி கோட்டை சுற்றுலா தளத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இன்ஸ்பெக்டர் கல்பனா தலைமையில் 5 போலீசார் பாதுகாப்புடன் 30 சிறார்கள், அவர்களின் புத்துணர்ச்சிக்காவும், கல்வியில் சிறந்து விளங்க ஊக்குவிக்கும் வகையிலும், பண்டைய கால வரலாற்று சிறப்புமிக்க செஞ்சி கோட்டைக்கு காவல் துறை வாகனம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு செஞ்சி கோட்டை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அனைத்து சிறார்களுக்கும் உணவு வசதிகளும் செய்யப்பட்டது.

