/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சிலம்பம் போட்டியில் மாணவர்கள் சாதனை
/
சிலம்பம் போட்டியில் மாணவர்கள் சாதனை
ADDED : ஜூலை 17, 2025 12:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த முட்டத்துார் பகுதி அரசு பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் இரண்டாமிடம் பிடித்து சாதனை செய்துள்ளனர்.
நமது சிலம்பம் பயிற்சிக் குழு மாணவர்கள் சென்னையில் , சுவின் சிலம்பம் ஸ்போர்ட்ஸ் அகாடமி நடத்திய போட்டியில் 14 வயது பிரிவில் இனியன் ,நவீன், சேவிதா, வித்யா ,யோகேஸ்வரன்; 17 வயது பிரிவில் சிவபாலன், நரேஷ்; மாற்றுத்திறனாளிகள் பிரிவில் செந்தமிழ்ச்செல்வன்; 19 வயது பிரிவில், விஷ்ணு மற்றும் அஜய் இரண்டாம் இடம் பிடித்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை மாஸ்டர் சுரேந்தர், பயிற்சியாளர் பிரதிபா உள்ளிட்டோர் பாராட்டினர்.