/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆய்வுக் கூட்டம்
/
பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆய்வுக் கூட்டம்
பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆய்வுக் கூட்டம்
பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆய்வுக் கூட்டம்
ADDED : செப் 29, 2024 05:07 AM

திண்டிவனம் : திண்டிவனத்தில், பா.ஜ., சார்பில், உறுப்பினர் சேர்க்கை குறித்து, கோட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடந்தது.
மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜா தலைமை தாங்கி, உறுப்பினர் சேர்க்கையை குறித்த கால கெடுவிற்குள் முடிக்க வேண்டும் என பேசினார்.
கூட்டத்தில், உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர் புரந்தேஸ்வரி எம்.பி., கட்சியின் மாநில பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், புதுச்சேரி முன்னாள் கவர்னர் தமிழிசை.
மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில நிர்வாகிகள் முருகானந்தம், சம்பத், துரைசாமி, சேகர், மாநில மகளிர் அணி தலைவர் உமாரதி ராஜன், கருநாகராஜ், சக்கரவர்த்தி.
விழுப்புரம் பெருங்கோட்ட பொறுப்பாளர் வினோஜ் செல்வம், மாவட்ட தலைவர் ராஜேந்திரன், ஸ்ரீராம் பள்ளி சேர்மன் முரளி ரகுராமன், தென்கோடிப்பாக்கம் ஊராட்சி தலைவர் ராஜசேகர், மாநில விளையாட்டு அணி ஹரிகிருஷ்ணன், நகர தலைவர் வெங்கடேச பெருமாள், மாவட்ட நிர்வாகிகள் வினோத், தினேஷ்குமார், வழக்கறிஞர் முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.