ADDED : மார் 29, 2026 11:08 PM

அ நிறம் | அளவு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 7 சட்டசபை தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் இன்று துவங்குவதால் தேர்தல் நடத்தும் அலுவலகங்களுக்கு படிவங்கள் அனுப்பும் பணி நடந்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் 7 சட்டசபை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று 30ம் தேதி துவங்குகிறது. வரும் ஏப்ரல் 6ம் தேதி வரை மனு தாக்கல் நடக்கிறது.
வேட்பு மனு தாக்கலை யொட்டி, விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் தேர்தல் ஆணையம் அலுவலகத்தில் இருந்து வாகனங்கள் மூலம், அரசு அச்சகத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட வேட்பு மனுக்களுக்கான படிவங்கள், விதிமுறை படிவங்கள் உள்ளிட்டவைகள் தேர்தல் நடத்தும் அலுவலகங்களுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.
