தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ இணைய தொழிலாளர்களுக்கு மானியத்தில் 'இ-ஸ்கூட்டர்'

இணைய தொழிலாளர்களுக்கு மானியத்தில் 'இ-ஸ்கூட்டர்'

இணைய தொழிலாளர்களுக்கு மானியத்தில் 'இ-ஸ்கூட்டர்'


ADDED : செப் 16, 2025 07:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 16, 2025 07:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், இணையம் சார்ந்த தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிந்தவர்களுக்கு மானிய விலையில் இ-ஸ்கூட்டர் வழங்கப்படுகிறது.

விழுப்புரம் தொழிலாளர் உதவி ஆணையர் மீனாட்சி செய்திக்குறிப்பு:

தமிழக அரசால், தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் நலவாரியம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது, அதில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் மானிய விலையில் இ-ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் ஸ்விக்கி, சொமாட்டோ, அமேசான், பிலிப்கார்ட் போன்ற இணையம் சார்ந்த தொழிலுக்கு பதிவு பெற்ற, தொழிலா ளர்கள் www.tnuwwb.tn.gov.in என்ற இணையதளத்தில் இ-ஸ்கூட்டர் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.

மேலும், கிக் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெறாத தொழிலாளர்களும் www.tnuwwb.tn.gov.in என்ற இணையம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு, விழுப்புரம் சாலாமேடில் இயங்கும் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us