/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'விடாமுயற்சி இருந்தால் வெற்றி' பயிற்சி கலெக்டர் அறிவுரை
/
'விடாமுயற்சி இருந்தால் வெற்றி' பயிற்சி கலெக்டர் அறிவுரை
'விடாமுயற்சி இருந்தால் வெற்றி' பயிற்சி கலெக்டர் அறிவுரை
'விடாமுயற்சி இருந்தால் வெற்றி' பயிற்சி கலெக்டர் அறிவுரை
ADDED : ஆக 02, 2025 07:32 AM

விழுப்புரம் : மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில், அரசு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 பணிக்கான முதல்நிலை தேர்வுக்கு பயிற்சி வகுப்பு விழுப்புரம் வேலை வாய்ப்பு மையத்தில் சமீபத்தில் துவங்கியது.
இந்த நிகழ்ச்சியில் வேலை வாய்ப்பு துறை உதவி இயக்குநர் பாலமுருகன் தலைமை வகித்தார். இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் லாவண்யா வரவேற்றார்.
விழுப்புரம் பயிற்சி கலெக்டர் வெங்கடேஸ்வரன் பயிற்சியை துவக்கி வைத்து பேசியதாவது:
அரசு துறைகளில், போட்டி தேர்வுகள் மூலம் அறிவிக்கும் பணியிடங்கள் குறைவாக இருக்கும்.
ஆனால், தேர்வை எதிர்கொள்ளும் போட்டியாளர்கள் பன்மடங்கு உள்ளனர்.
புத்தகங்களை படித்தால் மட்டும் போதாது. அனைத்து நிகழ்வுகளையும் நன்கு தெரிந்துகொள்ள வேண்டும், ஆழமாக படித்து, எப்போது கேட்டாலும் பதிலளிக்கும் புலமை பெற வேண்டும். மற்ற போட்டியாளர்கள் படித்து சாதிக்கும் போது, நம்மால் முடியாதா என்ற கேள்வியுடன் முழு முயற்சி எடுத்து, சாதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த பயிற்சி வகுப்புகள், திங்கள் முதல் வெள்ளிகிழமை வரை, காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கின்றன.