ADDED : ஜூன் 04, 2025 12:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று இரவு ஒரு சில இடங்களில் காற்றுடன் மழை பெய்தது.
கடந்த சில தினங்களாக மாவட்டத்தில் கோடை வெயில் அதிகரித்திருந்த நிலையில், நேற்று காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை பகல் நேரத்தில் கடுமையான வெயில் தாக்கம் இருந்தது. இரவு 7:30 மணிக்கு திடீரென காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
விழுப்புரம், வளவனுார், காணை, விக்கிரவாண்டி சுற்று வட்டார பகுதிகளில் 30 நிமிடங்கள் கன மழை கொட்டியது. இதனால், குளிர்ந்த காற்று வீசியதால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.