தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பாஸ்டேக் சர்வர் பிரச்னையால் அரசு பஸ் டிரைவர்கள்… அவதி! டோல்கேட்களில் நிறுத்தப்படுவதால் பயணிகள் தவிப்பு

பாஸ்டேக் சர்வர் பிரச்னையால் அரசு பஸ் டிரைவர்கள்… அவதி! டோல்கேட்களில் நிறுத்தப்படுவதால் பயணிகள் தவிப்பு

பாஸ்டேக் சர்வர் பிரச்னையால் அரசு பஸ் டிரைவர்கள்… அவதி! டோல்கேட்களில் நிறுத்தப்படுவதால் பயணிகள் தவிப்பு


UPDATED : மே 31, 2026 08:22 PM

ADDED : மே 31, 2026 08:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 31, 2026 08:22 PM ADDED : மே 31, 2026 08:21 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

-நமது நிருபர்-

விக்கிரவாண்டி மற்றும் ஆத்துார் டோல்கேட்டில் பாஸ் டேக்கில் பணம் எடுக்கும் சர்வர் பிரச்னையால் அரசு பஸ்கள் நிறுத்தப்படுவதால் டிரைவர்கள் மற்றும் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், விக்கிரவாண்டி மற்றும் திண்டிவனம் அடுத்த ஓங்கூர் அடுத்த ஆத்துாரில் டோல்கேட்கள் செயல்பட்டு வருகிறது. இந்த டோல்கேட்களில் நான்கு வழிச்சாலையை பயன்படுத்தும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த சுங்க கட்டணம் டோல்கேட்களில் அரசு பஸ் மற்றும் தனியார் வாகனங்களில் பணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் மத்திய அரசு பாஸ்டேக்கில் பணம் இருந்தால் மட்டுமே டோல் கேட்களை வாகனங்கள் கடக்க முடியும் என உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து வாகன ஓட்டிகள் மற்றும் அரசு பஸ்களில் பாஸ்டேக் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும், அங்கிருந்து தென் மாவட்டங்களுக்கு அரசு பஸ்கள் விக்கிரவாண்டி டோல்கேட்டை கடந்து செல்கின்றன. இந்த வாகனங்கள் பழுதாகினால், மாற்று பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

அந்த பஸ்களுக்கு பாஸ்டேக்கில் பணம் இல்லை என்றாலும் ரொக்கமாக கட்டணத்தை வாங்கிக் கொண்டு அனுமதித்து வந்தனர். ஆனால், பாஸ்டேக் மூலம் மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்படும் என்ற உத்தரவு கடுமையாக அமல்படுத்தப்படுகிறது.

இதனால், விழுப்புரத்தில் இருந்து சென்னை கிளம்பாக்கம் மற்றும் அடையாறு, மாதவரம் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் அரசு மாற்று பஸ்கள் அடிக்கடி நிறுத்தப்படுகிறது.

டோல்கேட் ஊழியர்களிடம் அரசு பஸ் ஊழியர்கள் மற்றும் பயணிகள் வாக்குவாதம் செய்த பிறகே பணத்தை கணக்கிலிருந்து ஆன் லைன் மூலம் பெற்றுக் கொண்டு அனுமதிக்கின்றனர். இதனால், பயணிகள் மட்டுமின்றி அரசு பஸ்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகம் மூலம் இயக்கப்படும் அனைத்து பஸ்களிலும் மாதாந்திர கட்டண பாஸ்டேக் போடப்பட்டுள்ளது.

அந்த பாஸ்டேக்களில் பணம் இருப்பு உள்ளது. மாற்று பஸ்கள் இயக்கும் போதும், அந்த வாகனங்களுக்கும் பாஸ்டேக் போடப்பட்டு இயக்கப்படுகிறது. சில சமயங்களில் சர்வர் பிரச்னையால், டோல்கேட்களில் பணம் எடுக்க தாமதம் ஏற்படுகிறது. இதனால், சில நிமிடங்கள் பஸ்கள் நிறுத்தப்படுகிறது' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us