/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குண்டும் குழியுமான சாலைகளால் அவதி
/
குண்டும் குழியுமான சாலைகளால் அவதி
ADDED : ஆக 12, 2025 11:14 PM

விழுப்புரம் : குண்டும் குழியுமான சாலைகளால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
விழுப்புரம், கிழக்கு பாண்டிரோடு, மீன் மார்க்கெட் அருகே உள்ள லட்சுமி நகர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இந்த பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு, 'பைப்' லைன்கள் போட்டு இரு ஆண்டுகளுக்கு மேலாகிறது. ஆனால், வீடுகளுக்கு இணைப்பும் கொடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர்.
இதனால், தோண்டப்பட்ட சாலைகள் புதுப்பிக்கப்படாமல், மண் சாலைகளாகி குண்டும், குழியுமாக உள்ளன.
இதையொட்டி வாகன ஓட்டிகள், பொது மக்கள் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள, அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

