/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கரும்பு விவசாயிகள் சங்க பேரவை கூட்டம் டன்னுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க தீர்மானம்

ADDED : ஜன 08, 2025 06:12 AM

விழுப்புரம் : முண்டியம்பாக்கம் மற்றும் செஞ்சி செம்மேடு ஆலைகளின் கரும்பு விவசாயிகள் சங்கத்தின் 2024-25 கரும்பு பருவத்தின் பேரவை கூட்டம் நடந்தது.
விழுப்புரம் கரும்பு விவசாயிகள் மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு, சங்க தலைவர் வழக்கறிஞர் பாண்டியன் தலைமை தாங்கினார். பொது செயலாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். பொருளாளர் பரமசிவம் வரவேற்றார். துணை தலைவர்கள் கலிவரதன், தண்டபாணி, வெங்கிடசாமி, ராஜாராமன், தண்டபானி, காத்தவராயன், துணை செயலாளர்கள் ரங்கநாதன், சக்திவேல், பெருமாள், ராஜசேகர், கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், 2024-25 கரும்பு அரவை பருவத்திற்கு கரும்பு வயல் விலையாக டன் ஒன்றிற்கு ரூ.5 ஆயிரம் மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும். கரும்பு வெட்டுக்கூலி முழுவதும் ஆலையாரே ஏற்க வேண்டும். ஆலையார் கரும்பு பிழித்திறன் காரணம் காட்டாமல் அரசு அறிவிக்கும் விலையை வழங்குதல், அனைத்து கரும்புகளையும் விவசாயிகள் பயிரிட ஆலை நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும்.
விதை கரணைகள் வாங்கும் விவசாயிகளுக்கு கடன் தொகைக்கு வட்டி பிடிக்க கூடாது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. துணை செயலாளர் முத்துநாராயணன் நன்றி கூறினார்.