/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கரும்பு விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் செய்ய வேண்டுகோள்
/
கரும்பு விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் செய்ய வேண்டுகோள்
கரும்பு விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் செய்ய வேண்டுகோள்
கரும்பு விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் செய்ய வேண்டுகோள்
ADDED : மார் 22, 2025 03:40 AM
செஞ்சி: கரும்பு விவசாயிகள் சொட்டுநீர் பாசனம் செய்து பலனடையுமாறு ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலையினர் கேட்டு கொண்டுள்ளனர்.
செம்மேடு ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலைக்கு உட்பட்ட கிராமங்களில் சம்பா நெற்பயிர் அறுவடை முடிந்து கரும்பு நடவு நடந்து வருவதால், குறைந்த சாகுபடி செலவில் அதிக பயன் பெற புதிய கரும்பு விவசாயிகள் புதிய தொழில் நுட்பத்தில் சொட்டு நீர் பாசன முறையை கடை பிடிக்க வேண்டியது அவசியமானது.
சொட்டுநீர் பாசனத்தினால் நீர் சேமிப்பு, களை கட்டுப்பாடு, விதை கரும்பின் தேவை குறைவு, உரச்சத்துக்கள் நேரிடையாக வேர் பகுதியில் கொடுக்கப்படுகிறது, உர உபயோகத்தின் திறன் அதிகரிக்கிறது, உரம் வீணாவது தடுக்கப்படுகிறது, குறைந்த அளவிலான வேலை ஆட்கள் போன்ற நன்மைகள் உள்ளன.
மேலும், நிலத்தடி சொட்டுநீர் பாசன மூலம் கரும்பு சாகுபடி செய்யும் சிறு, குறு மற்றும் பெரு விவசாயிகளுக்கு தமிழக அரசு கூடுதல் மானியம் அறிவித்துள்ளது.
எனவே கரும்பு விவசாயிகள் தண்ணீர் தேவையின் அவசியத்தை அறிந்து, நிலத்தடி நீரை பாதுகாப்பதுடன், தண்ணீரை சேமிக்க கரும்பில் சொட்டு நீர் பாசனம் அமைக்க வேண்டும்.
இதன் மூலம் அதிக மகசூல் பெற்று பயனடையலாம். சொட்டுநீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் அந்தந்த பகுதியில் உள்ள கோட்ட அலுவலரை தொடர்பு கொண்டு பயனடையலாம்.
இத்தகவலை செம்மேடு ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.