/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாநில அளவில் கரும்பு விளைச்சல் போட்டி
/
மாநில அளவில் கரும்பு விளைச்சல் போட்டி
ADDED : ஜன 10, 2024 12:19 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி வட்டாரத்தில் மாநில அளவில் கரும்பு விளைச்சலுக்கான போட்டி நடந்தது.
தென்னவராயன்பட்டு கிராமத்தில் நடந்த போட்டிக்கு, கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அசோக்குமார் தலைமை தாங்கினார். தென்னவராயன்பட்டில் விவசாயி ராஜலட்சுமி வயலில் கோ 86032 ரக கரும்பு 50 சென்ட் நிலத்தில் பயிரிட்டிருந்த கரும்பு அதிகாரிகள் முன்னிலையில் அறுவடை செய்யப்பட்டது.
தொடர்ந்து, அதன் எடையை மதிப்பீடு செய்து கலெக்டர் மூலம் மாநில வேளாண்மை இயக்குனர் அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படுகிறது.
கலெக்டர் நேர்முக உதவியாளர் (விவசாயம்) பெரியசாமி , உதவி இயக்குனர்கள் விக்கிரவாண்டி கங்கா கவுரி, ஒலக்கூர் விஜயசந்தர், முன்னோடி விவசாயி ரவிச்சந்திரன், முண்டியம்பாக்கம் ராஜ் ஸ்ரீ சர்க்கரை ஆலை அலுவலர்கள், வேளாண்மை அதிகாரிகள் பங்கேற்றனர்.

