/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கோடைகால மல்லர் கம்ப பயிற்சி முகாம்
/
கோடைகால மல்லர் கம்ப பயிற்சி முகாம்
ADDED : மே 29, 2025 12:08 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட அமெச்சூர் மல்லர் கம்பம் கழகம் சார்பில் கோடைகால மல்லர் கம்ப பயிற்சி முகாம் நிறைவு விழா நடந்தது.
வி.சாத்தனூர் ஜெய் ராமகிருஷ்ணா பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மல்லர் கம்ப பயிற்சியாளர் சிவசக்தி வரவேற்றார். முன்னாள் அமைச்சர் பொன்முடி, அன்னியூர்சிவா எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி., கவுதம்சிகாமணி, மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், முன்னாள் சேர்மன் ஜனகராஜ் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
ஒன்றிய சேர்மன் சங்கீதஅரசி, மாவட்ட சமூகநீதி பாதுகாப்பு இயக்க தலைவர் குபேரன், பள்ளி நிறுவனர் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மல்லர் கம்ப சர்வதேச நடுவர் செல்வமொழியன் தலைமையில், கோடைகால முகாமில் பயிற்சி பெற்ற ஏராளமான வீரர், வீராங்கனைகள் மல்லர் கம்ப சாகசத்தில் ஈடுபட்டனர்.
இறுதியாக மல்லர் கம்ப பயிற்சி முகாமில் பங்கேற்ற வீரர் வீராங்கனைகளுக்கு பரிசு கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டது.