ADDED : ஜூலை 17, 2025 12:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி : செஞ்சி பகுதியில் நேற்று பகல் முழுவதும் வெயில் வாட்டி எடுத்த நிலையில் மாலையில் மழை பெய்ததால் குளிர் காற்று வீசியது. கடும் வெயில் வாட்டி எடுக்கும் கோடை காலம் முடிந்து விட்ட நிலையில், சில நாட்களாக மீண்டும் வெயில் வாட்டி எடுத்து வந்தது.
செஞ்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் கடும் வெயில் சுட்டெரித்தது.
மாலை 5:30 மணிக்கு, லேசான காற்றுடன் திடீரென மழை பொழிந்தது. தொடர்ந்து ஒரு மணி நேரம் நீடித்த மழையினால் காலை முதல் இருந்து வந்த வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசியதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.