ADDED : மே 15, 2026 03:40 AM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: விழுப்புரம் பெருந்திட்ட வளாக நகராட்சி சிறுவர் பூங்காவில் சிறுவர்கள் விளையாடுவதற்கான உபகரணங்கள், உடற்பயிற்சி உபகரணங்கள், கிரிக்கெட் பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் நடைபாதை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் உடற்பயிற்சி, நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இரவு 9:00 மணி வரை பொதுமக்கள், குழந்தைகள் இந்த பூங்காவில் பொழுது போக்குகின்றனர். இரவு நேரம் என்பதால், பூங்காவில் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
இதனால், அங்கு பொதுமக்கள் பாதுகாப்பு கருதி மாலை நேரங்களில் போலீசாரை கண்காணிப்பு பணியில் நியமிக்க எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.
