/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வேளாண் கருவிகள் விவசாயிகளுக்கு வழங்கல்
/
வேளாண் கருவிகள் விவசாயிகளுக்கு வழங்கல்
ADDED : மார் 14, 2024 11:21 PM

வானுார்: திருச்சிற்றம்பலத்தில், விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட வேளாண்மை துறை சார்பில், விவசாயிகளுக்கு கடப்பாரை, இரும்பு சட்டி, களைக்கொத்து, மண்வெட்டி தலா ஒன்றும், கதிர் அரிவாள் இரண்டும், மானிய விலையில் வழங்கப்படுகிறது.
ஒரு வேளாண் கருவி தொகுப்பின் விலை 2,996 ரூபாய். இதில், அரசு மானியமாக 1,464 ரூபாய் வழங்குகிறது. திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தில் நடந்த விழாவில், வட்டார வேளாண் உதவி இயக்குனர் எத்திராஜ் வேளாண் கருவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில், வேளாண் அலுவலர் ரேவதி, துணை வேளாண் அலுவலர் செந்தில்குமார், உதவி விதை அலுவலர் மோகன் குமார், உதவி வேளாண் அலுவலர்கள் ரேகா, ஜெயலட்சுமி, யமுனா ஆகியோர் உடனிருந்தனர்.

