ADDED : செப் 27, 2025 02:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை : மேல்மலையனுாரில் விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசனத்திற்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மேல்மலையனுாரில் வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பில் 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சொட்டு நீர் பாசன கருவிகள், காய்கறி விற்பனை வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஒன்றிய சேர்மன் கண்மணி நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். மஸ்தான் எம்.எல்.ஏ., பயனாளிகளுக்கு சொட்டு நீர் பாசன கருவிகள் உள்ளிட்டவைகளை வழங்கினார். நிகழ்ச்சியில், துறை சார்ந்த அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.