ADDED : செப் 28, 2024 04:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார் வானுார் தாலுகாவில் மானிய விலையில் விவசாயிகளுக்க ஜிப்சம் உரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
வானுார் வேளாண்மை உதவி இயக்குனர் எத்திராஜ் தலைமை தாங்கி வழங்கினார். தொடர்ந்து அவர் பேசுகையில், ஏக்கருக்கு 200 கிலோ ஜிப்சம் உரத்தை அடி உரமாக நெல் நடவு செய்வதற்கு முன்பாக இட வேண்டும்.
ஜிப்சம் வானுார், கிளியனுார் மற்றும் பரங்கினி வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
ஒரு மூட்டை மானிய விலையில் 135 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஜிப்சம் உரம் தேவைப்படும் விவசாயிகள் சம்மந்தப்பட்ட உதவி வேளாண் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்' என்றார்.
நிகழ்ச்சியில் துணை வேளாண் அலுவலர் செந்தில்குமார், உதவி வேளாண் அலுவலர்கள் பஞ்சநாதன், தங்கம் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.