/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
உளுந்து விதைகள் விவசாயிகளுக்கு வழங்கல்
/
உளுந்து விதைகள் விவசாயிகளுக்கு வழங்கல்
ADDED : அக் 30, 2024 05:21 AM

வானுார் : திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு உளுந்து விதைகள் வழங்கும் விழா நடந்தது.
வானுார் தாலுகாவில் ராபி பருவத்தில் உளுந்து சாகுபடி பரப்பை அதிகரித்து உற்பத்தி திறனை அதிகரிக்கவும், தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் பயறு வகையான உளுந்தில் புதிய ரகத்தில் தொகுப்பு செயல் விளக்கம் அமைத்து, அதன் செயல் திறனையும், உற்பத்தியும் கண்காணித்திட விவசாயிகளுக்கு தொகுப்பு செயல் விளக்க திடல் இடுபொருள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஒன்றிய சேர்மன் உஷா விவசாயிகளுக்கு இடுபொருட்கள் மற்றும் உளுந்து விதைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் உதவி விதை அலுவலர் மோகன்குமார், உதவி வேளாண்மை அலுவலர்கள் பஞ்சநாதன், ஜெயலட்சுமி, உதவி தொழில்நுட்ப மேலாளர் கோவிந்தசாமி, முன்னோடி விவசாயி ஜானகிராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.