/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விரிவாக்க மையத்தில் இடுபொருட்கள் வழங்கல்
/
விரிவாக்க மையத்தில் இடுபொருட்கள் வழங்கல்
ADDED : அக் 02, 2024 11:41 PM

வானூர் : வானூர் வட்டாரத்தில் ராபி பருவத்தில் கம்பு சிறுதானிய முதன்மை செயல் விளக்க திடல் அமைக்க திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கப்பட்டது.
விவசாயிகளின் வயல்களில் சிறுதானிய கம்பு ரகம் கோ-10 முதன்மை செயல் விளக்கத்திடல் அமைத்து அதிக மகசூல் பெற ஏதுவாக இதர இடுபொருட்களான உயிர் உரங்கள், சிறுதானிய நுண்ணூட்ட உரங்கள், சூடோமோனாஸ் உயிரி காரணிகள் மற்றும் இயற்கை உரங்கள் அடங்கிய தொகுப்பு விவசாயிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
விழாவில் வானூர் வட்டார வேளண்மை உதவி இயக்குநர் எத்திராஜ் வழங்கினார்.
நிகழ்ச்சியில் வேளாண்மை அலுவலர் ரேவதி, உதவி விதை அலுவலர் மோகன் குமார், உதவி வேளாண்மை அலுவலர்கள் ரேகா, ஜெயலட்சுமி, ஆத்மா திட்ட அலுவலர்கள் வாழ்வரசி, கோவிந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.