/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கல்
/
விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கல்
ADDED : நவ 01, 2024 11:36 PM

செஞ்சி: வல்லம் வேளாண் விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு உளுந்து விதைகள் மற்றும் விவசாய உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.
வல்லம் ஒன்றியத்தில் ராபி பருவத்தில் உளுந்து சாகுபடி அதிகரிக்கும் பொருட்டு விவசாயிகளுக்கு உளுந்து விதை, பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்த நொச்சி செடி மற்றும் வேளாண் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஒன்றிய சேர்மன் அமுதா ரவிக்குமார் தலைமை தாங்கினார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார். வேளாண் உதவி இயக்குனர் பாலமுருகன் வரவேற்றார். மயிலம் தொகுதி எம்.எல்.ஏ., சிவக்குமார் விவசாயிகளுக்கு உளுந்து விதை, விவசாய உபகரணங்களை வழங்கினார்.
கவுன்சிலர் கோபால், தி.மு.க., அமைப்புசாரா தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் தமிழரசன், முன்னாள் தலைவர் பாண்டியராஜன், பா.ம.க., இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் சரவணன், நிர்வாகிகள் சக்கரவர்த்தி, வேலுசாமி, பாண்டியன் மற்றும் வேளாண் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.