/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பொன்முடி பதவி பறிபோனதால் ஆதரவாளர்கள் தீக்குளிக்க முயற்சி
/
பொன்முடி பதவி பறிபோனதால் ஆதரவாளர்கள் தீக்குளிக்க முயற்சி
பொன்முடி பதவி பறிபோனதால் ஆதரவாளர்கள் தீக்குளிக்க முயற்சி
பொன்முடி பதவி பறிபோனதால் ஆதரவாளர்கள் தீக்குளிக்க முயற்சி
ADDED : ஏப் 28, 2025 06:12 AM

விழுப்புரம் : பொன்முடியின் அமைச்சர் பதவி பறிபோனதால், திருவெண்ணெய்நல்லுாரில் அவரது ஆதரவாளர்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெண்களை இழிவாக பேசியதாக எழுந்த புகாரில், பொன்முடியின் அமைச்சர் பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டது. அதையடுத்து, அவர் தனது பதவியை ராஜனாமா செய்தார். அதையடுத்து, பேரூராட்சி  துணைத் தலைவர் ஜோதி தலைமையில் அவரது ஆதரவு தி.மு.க., நிர்வாகிகள் நேற்றிரவு 9:00 மணிக்கு திருவெண்ணெய்நல்லுார் கடை வீதியில் கூடினர்.
அங்கு கவுன்சிலர் பாக்கியராஜ், நிர்வாகி குணா ஆகியோர் உடலில் மண்ணெண்னை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது அங்கு வந்த திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இதற்கிடையே நிர்வாகி குணா தனது பைக்கை தானே தீ வைத்து எரித்து ஆதங்கத்தை வௌிப்படுத்தினார். போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். 9:30 மணி வரை நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

