/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரயில் நிலையத்தில் உணவுக்கு கூடுதல் விலை விழுப்புரம் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு
/
ரயில் நிலையத்தில் உணவுக்கு கூடுதல் விலை விழுப்புரம் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு
ரயில் நிலையத்தில் உணவுக்கு கூடுதல் விலை விழுப்புரம் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு
ரயில் நிலையத்தில் உணவுக்கு கூடுதல் விலை விழுப்புரம் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு
ADDED : செப் 25, 2024 08:09 PM
விழுப்புரம்:விழுப்புரம் வழுதரெட்டியைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. கடந்த 2022ம் ஆண்டு செப்., 2ல் மதுரை - சென்னை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அன்று காலை, 9:30 மணிக்கு திருச்சி ரயில் நிலைய பிளாட்பாரத்தில் தனியார் கேட்டரிங் ஸ்டாலில் விற்ற இரண்டு இட்லி பார்சல் 60 ரூபாய், இரண்டு வடை 20 ரூபாய் என, 80 ரூபாய் கொடுத்து வாங்கினார்.
பார்சல் மீது அதிகபட்ச சில்லறை விலை 72 ரூபாய் என குறிப்பிடப்பட்டு இருந்தது. கூடுதலாக வாங்கிய தொகையை கேட்டதற்கு, விற்பனையாளர் அலட்சியமாக சென்று விட்டார். இட்லி பார்சலை பிரித்து பார்த்தபோது சாம்பார் மட்டுமே இருந்தது. சட்னி இல்லை.
விழுப்புரம் வந்த ஆரோக்கியசாமி, திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட கேட்டரிங் நிறுவன உரிமையாளருக்கு, தன்னிடம் கூடுதலாக வசூலித்த 8 ரூபாயை திரும்ப வழங்க கோரி கடிதம் அனுப்பினார்.
விசாரித்த திருச்சி ரயில்வே கோட்ட நிர்வாகம், கேட்டரிங் ஸ்டால் நடத்தியவருக்கு, 1,000 ரூபாய் அபராதம் விதித்தது. ஆனால், ஆரோக்கியசாமியிடம் கூடுதலாக வசூலித்த 8 ரூபாயை கொடுக்கவில்லை. இதுகுறித்து, ஆரோக்கியசாமி விழுப்புரம் நுகர்வோர் நீதிமன்றத்தில் மனு அளித்தார்.
இந்த மனு, நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தது. ரயில்வே உதவி மேலாளர், தனியார் கேட்டரிங் ஸ்டால் நிறுவன வழக்கறிஞர்கள் ஆஜராகினர். கோட்ட ரயில்வே மேலாளர் வராததால், வழக்கு விசாரணையை அடுத்த மாதத்துக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.