/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சார் பதிவாளர் அலுவலகத்தில் 'திடீர்' ஆய்வு
/
சார் பதிவாளர் அலுவலகத்தில் 'திடீர்' ஆய்வு
ADDED : ஜூலை 18, 2025 05:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார்: வானுாரில் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திற்குட்பட்ட திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியில் கலைமகள் சபாவுக்கு சொந்தமான நிலம் உள்ளது.
இந்த நிலத்தினை கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சிலர் பதிவு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் பதிவுத்துறை தலைவர் தினேஷ் ஆலிவ்பொன்ராஜ் நேற்று சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்தார். அப்போது வானுார் வருவாய்த்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
தொடர்ந்து வானுார் சார்பதிவாளர் அலுவலகத்தில் அவர் ஆய்வு நடத்தி விட்டு சென்றார்.