/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி... தீவிரம்; 1,281 ஓட்டுச்சாவடிகளை கண்காணிக்க ஏற்பாடு
/
கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி... தீவிரம்; 1,281 ஓட்டுச்சாவடிகளை கண்காணிக்க ஏற்பாடு
கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி... தீவிரம்; 1,281 ஓட்டுச்சாவடிகளை கண்காணிக்க ஏற்பாடு
கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி... தீவிரம்; 1,281 ஓட்டுச்சாவடிகளை கண்காணிக்க ஏற்பாடு
ADDED : ஏப் 16, 2024 07:33 AM

விழுப்புரம், ; விழுப்புரம் மாவட்டத்தில், பதற்றமான ஓட்டுச்சாவடிகள் உட்பட 1,281 ஓட்டுச்சாவடிகளில், கண்காணிப்பு கேமரா பொருத்தி, தேர்தலன்று கண்காணிப்பதற்கான ஏற்பாடுகள் துவங்கியது.
வரும் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடக்கிறது. இதற்காக விழுப்புரம், விக்கிரவாண்டி, வானுார், திண்டிவனம், திருக்கோவிலுார், மயிலம், செஞ்சி ஆகிய 7 சட்டசபை தொகுதிகளில் 1,966 ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு தேர்தல் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
முதல் கட்டமாக மின்னணு ஓட்டுபதிவு இயந்திரங்கள் தயார்படுத்தப்பட்டு, அந்தந்த தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மின்னணு இயந்திரங்களில் சின்னம் பதிக்கும் பேலட் ஷீட் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும், மாவட்டத்தில் உள்ள பதற்றமான, மிகவும் பதற்றமான ஓட்டுச்சாவடிகள் கண்டறியப்பட்டு அந்த ஓட்டுச்சாவடி களில் நேரடியாக கண்காணிப்பு கேமராக்கள் வைத்து கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்காக, ஓட்டுச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நேற்று முதல் துவங்கியது.
தேர்தல் துறை மேற்பார்வையில், தனியார் ஒப்பந்த நிறுவனத்தினர் மூலம் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.
இதற்காக 7 தொகுதிகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ள, ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில், 67 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த ஓட்டுச்சாவடிகளில், கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுகிறது.
மேலும், மாவட்டத்தில் மொத்தமுள்ள 1,966 ஓட்டுச்சாவடிகளில், 65 சதவீதம் ஓட்டுச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிக்க உள்ளனர்.
இதனால், மொத்தம் 1,281 ஓட்டுச்சாவடிகளில் கேமரா பொருத்தப்பட உள்ளது. தொடர்ந்து 2, 3 நாள்களில் ஓட்டுச்சாவடிகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டு, மாதிரி வெப் காஸ்டிங் தொடங்கும். அதன் பிறகு, தேர்தலன்று, நேரடியாக, அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் கட்டுப்பாட்டு அறை, தேர்தல் துறை அதிகாரிகள் நேரடியாக அந்த வெப் காஸ்டிங் மூலம், ஓட்டுப்பதிவை நேரடியாக காணலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

