/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பனிப்பயிர் சாகுபடி வளர்ச்சி நிலை வேளாண்மை உதவி இயக்குனர் ஆய்வு
/
பனிப்பயிர் சாகுபடி வளர்ச்சி நிலை வேளாண்மை உதவி இயக்குனர் ஆய்வு
பனிப்பயிர் சாகுபடி வளர்ச்சி நிலை வேளாண்மை உதவி இயக்குனர் ஆய்வு
பனிப்பயிர் சாகுபடி வளர்ச்சி நிலை வேளாண்மை உதவி இயக்குனர் ஆய்வு
ADDED : பிப் 03, 2024 12:00 AM

வானுார், -வானுாரில் பனிப்பயிர் சாகுபடி வளர்ச்சி நிலையை, வேளாண் உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.
வானுார் தாலுகாவில் நடப்பு ராபி பருவத்தில் 6,000 கிலோ பனிப்பயிர் விதைகள் வேளாண்மை விரிவாக்க மையங்களின் மூலம் மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு, தற்சமயம் 1,450 ஏக்கர் பரப்பளவில், திண்டிவனம் -1 ரக பனிப்பயிர் வளர்ச்சி நிலை மற்றும் காய் பிடிக்கும் தருணம் வரை பரவலாக சாகுபடி செய்யப்பட்டு, நல்ல நிலையில் உள்ளது. இந்த பனிப்பயிர்களை வானுார் வேளாண்மை உதவி இயக்குனர் எத்திராஜ் ஆய்வு செய்தார்.
ஆய்வுக்குப் பின் அவர் கூறுகையில், 'இந்த ஆண்டு பனிப்பயிர் மகசூல் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கூடுதல் மகசூல் பெற பயிறு ஒண்டர் தெளித்திட விவசாயிக்கு அறிவுரை வழங்கப்பட்டது. இந்த ஆண்டு பனிப்பயிருக்கு நல்ல விலை கிடைக்க முன்னோடி விவசாயிகள், வியாபாரிகள், வேளாண்மை மற்றும் வேளாண் விற்பனை துறை அதிகாரிகள் அடங்கிய முத்தரப்பு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.
இதில் அதிக அளவு வியாபாரிகளை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு வரவழைக்கப்பட்டு, கடந்த ஆண்டு கொள்முதல் செய்த விலைக்கு குறையாமல் விலை கிடைக்க வியாபாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது' என்றார்.
ஆய்வின் போது, துணை வேளாண்மை அலுவலர் செந்தில்குமார், உதவி வேளாண்மை அலுவலர் பஞ்சநாதன், வானுார் விவசாயி சச்சிதானந்தம் உடனிருந்தனர்.

