/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நில அளவை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
நில அளவை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 20, 2025 05:32 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் நில அளவை அலுவலர்கள் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க மாவட்ட தலைவர் மகேஸ்வரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், நில அளவை களப்பணியாளர்களின் நிலம் சார்ந்த அனைத்து பராமரிப்பு பணிகளையும் கருத்தில் கொண்டு, இணையவழி உட்பிரிவு பட்டா மாறுதல் பணியில் உள்ள மனித சக்திக்கு மீறிய பணி குறியீட்டை குறைக்க வேண்டும், ஒருமுறை தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவியை மீண்டும் தரம் உயர்த்தி வழங்க வேண்டும்.
நில அளவர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், துணை ஆய்வாளர், ஆய்வாளர்கள் ஊதிய முரண்பாட்டை களைந்திட வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.
மாவட்ட துணை தலைவர்கள் அரிபிரசாத், ராம்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். மாவட்ட பொருளாளர் ராஜேஷ் நன்றி கூறினார்.

