/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
காப்பர் கம்பி திருடிய ஆசாமி கைது
/
காப்பர் கம்பி திருடிய ஆசாமி கைது
ADDED : மே 09, 2025 12:25 AM

கோட்டக்குப்பம்: கோட்டக்குப்பத்தில் மின் வாரியத்திற்கு சொந்தமான காப்பர் கம்பிகளை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
கோட்டக்குப்பம் மின் வாரியத்திற்கு சொந்த பழைய இரும்பு, காப்பர் உள்ளிட்ட பொருட்கள் பர்கத் நகரில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள டிரான்ஸ்பார்மர்களின் 60 கிலோ காப்பர் கம்பிகள் சில தினங்களுக்கு முன்பு திருடு போனது.
இளமின் பொறியாளர் ஆதிமூலம் அளித்த புகாரின் பேரில், கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில், கடலுார் அடுத்த திருமாணிக்குழியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், 35; என்பவர் திருடியது தெரியவந்தது. உடன் அவரை பிடித்து விசாரித்தில், காப்பர் கம்பிகளை திருடி விற்றதை ஒப்புக் கொண்டார். அதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.