/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மகள் சாவில் சந்தேகம்; போலீசில் தந்தை புகார்
/
மகள் சாவில் சந்தேகம்; போலீசில் தந்தை புகார்
ADDED : அக் 26, 2024 07:37 AM

வானுார் : வானுார் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட பெண் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வானுார் அடுத்த கடப்பேரிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சரண்ராஜ். பெயிண்டர். இவரது மனைவி தவமணி மகள் அனிதா, 19; இருவரும் காதலித்து 4 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர்.
தொடர்ந்து அனிதா, வில்லியனுார் அருகே உள்ள தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது தந்தை தவமணி, தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக அளித்த புகாரின் பேரில், வானுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திருமணமாகி நான்கு மாதங்களே ஆவதால், ஆர்.டி.ஓ., விசாரணையும் நடக்கிறது.