/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வி . ஏ . ஓ ., க்கள் போராட்டம் எதிரொலி கலந்தாய்வு ஆணை நிறுத்தி வைப்பு
/
வி . ஏ . ஓ ., க்கள் போராட்டம் எதிரொலி கலந்தாய்வு ஆணை நிறுத்தி வைப்பு
வி . ஏ . ஓ ., க்கள் போராட்டம் எதிரொலி கலந்தாய்வு ஆணை நிறுத்தி வைப்பு
வி . ஏ . ஓ ., க்கள் போராட்டம் எதிரொலி கலந்தாய்வு ஆணை நிறுத்தி வைப்பு
ADDED : ஆக 23, 2025 04:13 AM
விழுப்புரம் : வி.ஏ.ஓ.,க்கள் போராட்டத்தால், பொது இடமாறுதல் கலந்தாய்வில் வழங்கிய ஆணையை நிறுத்தி வைத்து ஆர்.டி.ஓ., உத்தரவிட்டள்ளார்.
விழுப்புரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கடந்த 18ம் தேதி இரவு முதல் நேற்று முன்தினம் வரை தொடர் தர்ணா போராட்டம் நடந்தது.
அதில் தவறான முதுநிலை பட்டியலை பயன்படுத்தி இரவு நேரத்தில் நடத்திய கலந்தாய்வை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து, விழுப்புரம் ஆர்.டி.ஓ., முருகேசன், தாசில்தார் கனிமொழிக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.
அந்த கடிதத்தில், 'விழுப்புரம் தாலுகாவில் வி.ஏ.ஓ.,க்களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வு கடந்த 18ம் தேதி நடந்தது. தற்காலிக முதுநிலை பட்டியலில் சில வி.ஏ.ஓ.,க்களிடம் இருந்து ஆட்சேபனை மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
மேலும், வி.ஏ.ஓ.,க்களுக்கான முதுநிலை வரிசை கிராமம் எண்ணிடுவது குறித்து உரிய தெளிவுரை வேண்டி கலெக்டர், சென்னை வருவாய் நிர்வாக ஆணையருக்கு கடித வரைவு அனுப்பி நிலுவையில் இருந்து வருகிறது.
அதன்படி, ஆணையரிடம் இருந்து உரிய தெளிவுரை வரப்பெற்று, அதனடிப்படையில் முதுநிலைப்பட்டியல் வெளியிடப்படும் வரை, கடந்த 18ம் தேதி நடந்த பொது இடமாறுதல் கலந்தாய்வில் வழங்கிய ஆணை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது,' என கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, நான்கு நாட்களுக்கு பிறகு வி.ஏ.ஓ.,க்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.