/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சுவாமி தேசிகன் முதலில் அருளியது
/
சுவாமி தேசிகன் முதலில் அருளியது
ADDED : செப் 05, 2025 07:54 AM
ஆழ்வார்கள் தங்கள் பாசுரங்களில் ஆங்காங்கே ஸ்ரீ ஹயக்ரீவனை பாடி துதித்துள்ளனர். சுவாமி தேசிகன் காஞ்சியிலிருந்து திருவஹீந்திரபுரம் வந்து, தேவநாதன், ஹேமாம்புஜ நாயகி, திவ்ய தம்பதிகளின் அனுமதியைப் பெற்று, எதிரே உள்ள ஒளதகிரி மலையின் மேல் அமர்ந்து கருட மந்திரத்தை பல்லாயிரக் கணக்கில் ஆவ்ருத்தி செய்து, ஸ்ரீ கருடன் பிரசன்னராகி, ஸ்ரீ ஹயக்ரீவ மந்திரத்தை உபதேசிக்க, சுவாமி தேசிகன் பல்லாயிரக்கணக்கில் ஸ்ரீ ஹயக்ரீவ மந்திரத்தை ஜெபிக்க மகிழ்ச்சியுடன் ஸ்ரீ ஹயக்ரீவர் நேரிடையாக தரிசனம் அளித்து தன் லாலாம்ருத்தை சுவாமி தேசிகனுக்கு அருள, அவர் முதலில் அருளியது ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்திரம் தான்.
'ஜ்ஞானாநந்த மயம் தேவம் நிர்மலஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வ வித்யாநாம் ஹயக்ரீவ முபாஸ்மஹே'
'சத்யம், ஞானம், அநந்தம், ப்ரம்மா' என்கிற வாக்கியத்தின் பொருள் விளங்குவதாக ஞானத்தின், ஆனந்தத்தின் இருப்பிடமாக பரிமுகனைத் துதிக்கத் துவங்குகிறார். ஞானம் என்பது சேதனனைப் பொருத்திய ஆத்ம ஞானம் மட்டிற்குமன்றி வேத வேதாந்த தத்துவ ஞானத்திற்குமான பூரண வடிவானவர் ஸ்ரீ ஹயக்ரீவன் என்பதே.
தர்மாதி பீடத்தில் அருள்பாலிப்பு இக்கோவில் 1971ம் ஆண்டு நிர்மானிக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, 1983, 1995, 2012ம் ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடந்தது. 2012ம் ஆண்டு முதல் ஸ்ரீ தர்மாதி பீடத்தில் கொலு வீற்றிருந்து அருள் பாலிக்கிறார்.