எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தம் திண்டிவனத்தில் இனிப்பு வழங்கல்
எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தம் திண்டிவனத்தில் இனிப்பு வழங்கல்
ADDED : மார் 13, 2026 06:33 AM

திண்டிவனம்: திண்டிவனம் ரயில் நிலையத்தில் 2 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்வதையொட்டி, அ.தி.மு.க., வினர் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
திண்டிவனத்தில் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுவை மத்திய ரயில்வே அமைச்சரை அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., சண்முகம் நேரில் சந்தித்து அளித்தார்.
அதன்பேரில் திண்டிவனம் ரயில் நிலையத்தில் உழவன் எக்ஸ்பிரஸ், மங்களூரு எக்ஸ்பிரஸ் ஆகிய 2 ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதனையொட்டி, திண்டிவனம் ரயில் நிலையத்தில் நகர அ.தி.மு.க.. சார்பில் ரயில் பயணிகளுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் ரூபன்ராஜ் தலைமை தாங்கினார்.
மாவட்ட அவைத்தலைவர் தீனதயாளன், ஜெ.,பேரவை இணைச் செயலாளர்கள் வடபழனி, விஜயகுமார், சக்தி பெரியதம்பி.
எம்.ஜி.ஆர்.மன்றம் ஏழுமலை, ரவி, மாவட்ட மகளிர் அணி தமிழ்ச்செல்வி, நகர ஜெ.,பேரவை செயலாளர் உதயகுமார், வழக்கறிஞர்கள் குலசேகரன், திருமுருகன், முன்னாள் கவுன்சிலர்கள் திருப்பதியார் சங்கர், சக்திவேல், பாலச்சந்தர், செந்தில், நகர நிர்வாகிகள் மணிமாறன், வினோத், ஜெயவேல், தினகரன், கார்த்தி, சீனு, கோபி, அண்ணாதுரை உட்பட பலர் பங்கேற்றனர்.
