/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி . மு . க ., மத்திய மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்
/
தி . மு . க ., மத்திய மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்
ADDED : ஜூலை 29, 2025 10:40 PM

விழுப்புரம்; விழுப்புரம், வானுார் தொகுதிகளுக்கான தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில், விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், 91 ஓட்டுச்சாவடிகளில், ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை திட்ட பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., களப்பணி மூலம் வீடுகள் தோறும் சென்று புதிய உறுப்பினர்களை சேர்த்தல், பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசனை வழங்கினார். மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், ஒன்றிய செயலாளர்கள் தெய்வசிகாமணி, பிரபாகரன், ராஜா, முருகவேல், சீனு செல்வரங்கம், செல்வமணி, முரளி, பாஸ்கர், மைதிலி ராஜேந்திரன், மற்றும் நகர, பேரூராட்சி செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சார்பு அணி நிர்வாகிகள், ஓட்டுச்சாவடி முகவர்கள் பங்கேற்றனர்.