
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் ஆர்.டி.ஓ., பொறுப்பேற்றார்.
விழுப்புரம் ஆர்.டி.ஓ., வாக இருந்த காஜாஷாகுல் அமீது கடந்த மாதம் இடமாற்றம் செய்யப்பட்டார். தொடர்ந்து (பொறுப்பு) ஆர்.டி.ஓ.,வாக தமிழரசன் இருந்தார்.
தற்போது, விழுப்புரம் மாவட்ட கலால் உதவி ஆணையராக இருந்த முருகேசன் விழுப்புரம் ஆர்.டி.ஓ.,வாக நியமிக்கப்பட்டு, நேற்று பொறுப்பேற்றார்.
அவருக்கு தாசில்தார்கள் வேல்முருகன், கனிமொழி மற்றும் துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், வி.ஏ.ஓ.,க்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

