ADDED : மார் 21, 2025 05:25 AM

அ நிறம் | அளவு
வானுார் : கிளியனுார் காவல் நிலைத்தில் புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கிளியனுார் இன்ஸ்பெக்டராக இருந்த பாலமுரளி, திண்டிவனம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
அவருக்கு பதிலாக விழுப்புரம் சரக அலுவலகத்தில் இருந்த இன்ஸ்பெக்டர் கலையரசி, கிளியனுார் காவல் நிலையத்திற்கு நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
