
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: செஞ்சி தாசில்தாராக கார்த்திகேயன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
விழுப்புரம் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் 15 தாசில்தார்களை சட்டசபை தேர்தலை முன்னிட்டு இடமாற்றம் செய்து கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவிட்டுள்ளார். அதன்படி செஞ்சி தாசில்தாராக பணிபுரிந்து வந்த துரைசெல்வன், மொரட்டாண்டி, நில எடுப்பு தாசில்தாராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
விழுப்புரம் நில எடுப்பு தனி தாசில்தார் கார்த்திகேயன், செஞ்சி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று தாலுகா அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

